சுங்கச்சாவடியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி பயங்கர விபத்து : ஊழியர் பலி… ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2023, 4:47 pm

மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் இன்று வழக்கம்போல் வாகனங்கள் கடந்து சென்றது.

அப்போது எதிர் புறமாக அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி அதிவேகமாக டோல்கேட் பகுதி கடந்து சென்றதனால் டோல்கேட்டில் இருந்த கட்டண வசூல் மையம் சேதமடைந்த நிலையில், அங்கு பணியில் இருந்த சதீஷ்குமார் என்ற ஊழியர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

அதனைத் தொடர்ந்து தறிகட்டி சென்ற லாரி மோதி ஆம்னி வாகனத்தில் வந்தவர்கள் இரண்டு பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 475

    0

    0