மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2023, 11:14 am

தற்போது கோடை வெயிலின் தாக்கத்தினால் பல்வேறு இடங்களில் திடீரென தீப்பற்றி எரிவது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

மின்சார வயர்களில் இருந்து மின் கசிவு காரணமாக குடியிருப்பு வீடுகள் நிறுவனங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீரென தீபற்றுவதால் அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு எச்சரிக்கை நோட்டீஸ்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து இன்று காலை கோவை புதூர் பகுதியில் அமைந்துள்ள படுக்கை தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென மின்கசிவு காரணமாக தீப்பற்றியதால் நிறுவனத்தில் தயாரித்து வைத்திருந்த படுக்கைகள் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் என அனைத்தும் தீயில் கருகியது.

தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருகே உள்ள மற்ற நிறுவனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கும் விதமாக தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு வந்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து கோவைப்புதூர் காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!