ஐஸ்கிரீம் கிடங்கில் பயங்கர தீ விபத்து… தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2023, 11:51 am

ஐஸ்கிரீம் கிடங்கில் பயங்கர தீ விபத்து… தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்.. போலீசார் விசாரணை!!

ஓசூர் ஆவலப்பள்ளி அட்க்கோ பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (65)கடந்த 40 ஆண்டுகளாக (ஐஸ்) பிசினஸ் தொழில் செய்து வந்தார்.

அவருக்கு சொந்தமான ஐஸ் டிஸ்ட்ரிபியூட்டர் ஆவலப்பள்ளி அட்கோ பகுதியில் இயங்கி வந்தது. இங்கு 10 தொழிலாளர்கள் வே லை செ ய்து வந்தனர்.

வழக்கம் போல தொழிலாளர்கள் இரவு 8 மணிக்கு கதவு அடைத்து சென்றனர். பின்னர் இன்று காலை திடீரென புகை கசிந்தது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் அளித்தனர் .


அதன் பெயரில் இங்கு வந்து பார்த்தபோது மின் கசிவுகாரணமாக 30க்கும் மேற்பட்ட ஐஸ் பெட்டிகள் இருந்தன. இதில் 15 ஐஸ் பெட்டிகள் தீயில் கருகினால் இதனுடைய மதிப்பு சுமார் ஐந்து முதல் ஏழு லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அட்கோ போலீசார் விசாரணை நடக்க வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எறிந்தது தெரியவந்துள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…