பயங்கரமாக கேட்ட சத்தம்.. உடல் சிதறி பலியான 2 உயிர்கள் : விசாரணையில் பகீர்!!!
Author: Udayachandran RadhaKrishnan15 September 2023, 2:11 pm
பயங்கரமாக கேட்ட சத்தம்.. உடல் சிதறி பலியான 2 உயிர்கள் : விசாரணையில் பகீர்!!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் ஊராட்சி மங்கம்மா சாலை அருகே தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் தார்பாயினால் செட் அமைத்து அரசு அனுமதியின்றி பேப்பர் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மங்கம்மா சாலையை சேர்ந்தவர்கள் ராஜா (வயது 28) கருப்பையா (வயது 25).
பேப்பர் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டபோது திடீரென வெடி வெடித்து சிதறியதில் இருவரது உடல் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாயினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நத்தம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு அனுமதியின்றி பட்டாசு வெடி தயாரித்தது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடி விபத்து சம்பவம் இப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.