பள்ளி மாணவன் கொலை வழக்கில் பயங்கர திருப்பம்.. சிசிடிவியால் சிக்கிய போதை தந்தை.. விசாரணையில் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan18 June 2024, 11:02 am
தருமபுரி பென்னாகரம் அருகே உள்ள தாசம்பட்டியில் நேற்று காலை, சிறுவன் ஒருவன் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தான்
இது குறித்து தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற பென்னாகரம் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பென்னாகரம் அருகே உள்ள திப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பெருமாளின் மகன் யாதவன் (16) என தெரியவந்தது.
யாதவன் திப்பட்டி அருகே உள்ள பண்ட அள்ளியில் உள்ள அரசு பள்ளியில், பதினோராம் வகுப்பு படித்து வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்தது
இதனைத் தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இறந்த சிறுவனின் கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு, பள்ளி மாணவன் யாதவனின் தந்தை பெருமாளை, சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிடைத்த CCTV காட்சிகளைக் கொண்டு, பெருமாள் மீது சந்தேகம் வலுத்தது. மேலும் மூன்று தனிப்படைகள் அமைத்து இந்த கொலை தொடர்பாக பென்னாகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வந்த பெருமாள், ஒரு வழியாக போலீசாரின், கிடுக்கு பிடி விசாரணையில் இன்று உண்மையை ஒப்புக் கொண்டான்.
வால்பாறையில் தனது இளைய மகனை பள்ளியில் சேர்த்துவிட்டு, குடிபோதையில் பென்னாகரம் அருகே உள்ள திப்பட்டி தனது வீட்டிற்கு பெருமாள் வந்துள்ளான். அப்போது தாசம்பட்டியில் தனது தாயிடம் இருந்த யாதவன், தந்தையை காண திப்பட்டிக்கு வந்துள்ளான், உறங்கிக் கொண்டிருந்த யாதவனை எழுப்பிக் கொண்டு, வா தாசம்பட்டி செல்லலாம்… நீ மட்டும் ஏன் வந்தாய்? உனது தாயையும் அழைத்து வர வேண்டியதுதானே? உனது தம்பியை பதினொன்றாம் வகுப்பு, வால்பாறையில் சேர்த்து உள்ளேன். அவனது ஜாதி சான்றிதழ் உனது அம்மாவிடம் உள்ளது, அதை வாங்கிக் கொண்டு வா? என திட்டியுள்ளார்.
நாளை காலை வாங்கி வந்து தருகிறேன் என சொல்லியும் அதிகப்படியான போதையின் காரணமாக தொடர்ந்து அடித்து இழுத்து வந்துள்ளார். நீ எப்போதும் உன் அம்மாவின் பக்கம் தான் பேசுவாய், உன்னால் தான் உன் அம்மா ஆடுகிறாள் எனது திட்டியுள்ளான்
இந்நிலையில் அதிகாலை நாலு மணிக்கு, இருசக்கர வாகனத்தில், திப்பட்டியிலிருந்து தாசம்பட்டிக்கு அழைத்து வரும் பொழுது, பாதி வழியில் இறங்கி தப்பிச் செல்ல யாதவன் முற்பட்டுள்ளான். இதனைத் தொடர்ந்து, ஓடிய யாதவன் மீது கல்லை எடுத்து பெருமாள் அடித்ததில், அவன் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளான்.
ஆத்திரம் தீராத தந்தை பெருமாள் தலைக்கேறிய போதையில் பெரிய கல்லை தூக்கி அவனது தலைமீது போட்டு விட்டு, குடிபோதையில் திப்பட்டிக்கு சென்றுள்ளான்.
விசாரணையில் தெரிய வந்த தகவலைத் தொடர்ந்து தொடர்ந்து
பெருமாளை போலீசார் கைது செய்து பென்னாகரம் நீதிமன்றத்தில் ஆதார் படுத்தி சிறையில் அடைத்தனர்
குடும்பத் தகராறு காரணமாக தந்தையே மகனை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தென்னாரம் பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.