தவெகவில் பதவி? தற்குறி ஸ்டேட்டஸ்.. தாடி பாலாஜி விளக்கம்!

Author: Hariharasudhan
12 February 2025, 12:05 pm

உங்களின் (விஜய்) கட்சியில் (தவெக) தொண்டனாகவே இருந்தாலும் எனக்கு சந்தோஷம்தான் என நடிகர் தாடி பாலாஜி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

சென்னை: கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை வரவேற்கும் வீடியோவையும், விஜய் பெயரைத் தன் நெஞ்சில் பச்சை குத்தியதையும் ஒப்பிட்டு, ‘அவளோ புது பாய் ஃபிரண்டுடன் சந்தோஷமாக இருக்கிறாள், நானோ தற்குறியாக அவளது நினைவிலேயே இருக்கிறேன்’ என மீம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் பிரபல நடிகர் தாடி பாலாஜி.

இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, தாடி பாலாஜிக்கு தவெகவில் விஜய் பொறுப்பு வழங்காததன் விரக்தியே இப்படியே வெளிப்படுகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தாடி பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள தாடி பாலாஜி, “2, 3 நாட்களாகவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் என்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றிய விஷயத்தை எல்லோரும் பகிர்கின்றனர். யாரோ ஒருவர் எனக்கு அனுப்பியதை, நான் எதேச்சையாக எனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தேன்.

Thaadi Balaji

அது இப்படியொரு விவாதப்பொருளாக மாறும் என்று எனக்குத் தெரியாது. எனது நண்பரும், தவெக தலைவருமான மரியாதைக்குரிய விஜய் அவர்கள் கட்சி தொடங்கும்போது, நான் என்ன சொன்னேன் என்றால், அவரது நண்பராக நான் பணியாற்றுகிறேன். அவர் நல்லபடியாக வர வேண்டும், அந்தக் கட்சி நல்லபடியாக வளர வேண்டும் என்று கூறினேன்.

பதவியை எதிர்பார்த்தோ, எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்றோ நான் பணி செய்யவில்லை. இன்று தைப்பூசத் திருநாளில் நான் ஓப்பனாகச் சொல்கிறேன். யாருக்கு புரியுதோ, இல்லையோ, நான் கும்பிடும் கடவுளுக்குப் புரியும். எனது நண்பரும், தவெக தலைவருமான விஜய்க்குப் புரியும்.

ஏனென்றால், விஜய் எல்லோருடைய பேச்சையும் கேட்டு, அதை அனலிசஸ் பண்ணமாட்டார். அவரே ஒரு முடிவெடுப்பார். அந்த முடிவு சரியாக இருக்கும். அதனால்தான் அவர் இன்று அரசியலில் பயணம் செய்கிறார். தலைவருக்குத் தெரியும், பாலாஜிக்கு என்ன கொடுக்க வேண்டும்? என்ன கொடுத்தால் பாலாஜி இன்னும் பலமாக ஓடுவார் என்று.

தைப்பூச நாளில் சொல்கிறேன், கூடிய விரைவில் என்னுடைய நண்பரும், தலைவருமான விஜயிடம் இருந்து ஒரு அழைப்பு வரும். அந்த அழைப்பில் இருந்து என்னுடைய ஓட்டம் வேறு விதமாக இருக்கும். இப்போதும் சொல்கிறேன், நான் பதவிக்காக பணி செய்யவில்லை. மார்ச் மாதம் தலைவர் (விஜய்) சுற்றுப்பயணம் போகிறார்.

இதையும் படிங்க: காவடி எடுங்கள் விஜய்,, ஏசி ரூம் அரசியலா? அண்ணாமலை கடும் விமர்சனம்

அதற்கு உறுதுணையாக இருக்கும் ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், என்னுடைய தலைவருக்கும் வாழ்த்துகள். இந்தச் சுற்றுப்பயணம் உங்களுக்கு பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். இப்போது நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்களின் கட்சியில் தொண்டனாக பயணிப்பதில் எனக்கு சந்தோஷம். தொண்டனாகவே இருந்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.

எப்போதுமே எனது தலைவருக்காக பணியாற்றிக் கொண்டே இருப்பேன். மீண்டும் ஒருமுறை எனது நண்பரும், தவெக தலைவருமான விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • Bharathiraja son Manoj death பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!