வெளியானது “தாய் கிழவி” பாடல்.. தனுஷ், அனிருத் கூட்டணியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் முதல் பாடல்!
Author: Rajesh24 June 2022, 6:18 pm
தனுஷ் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மூன்று நடிகைகள் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் நடித்துள்ளனர். மேலும் முன்னணி இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலுக்கு தனுஷ் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் செம வைரலாகியுள்ளது.