விஜய்யின் முதல் பான் – இந்திய திரைப்படம்.? – வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்..!
Author: Rajesh26 March 2022, 12:35 pm
விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே தமிழ் தெலுங்கில் ரிலீஸாக உள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் 5 மொழிகளில் பான் – இந்திய திரைப்படமாக ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்தப்படம் தான் விஜய்யின் முதல் பான் – இந்திய திரைப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ‘பீஸ்ட்’ படத்துடன் வெளியாகும் ‘கேஜிஎப் 2’ திரைப்படமும் ஒரு பான் – இந்தியா திரைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.