ஏமாற்றம் அளித்தாரா விஜய்..? நெல்சனை வச்சு செய்யும் ரசிகர்கள்.. லாஜிக் இல்லா மேஜிக்காக மாறியதா பீஸ்ட்..?
Author: Rajesh13 April 2022, 11:31 am
நடிகர் விஜய்யின் 65-வது படமான ‘பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள்.
விஜய்யின் முந்தைய படங்களுக்கு இல்லாத அளவுக்கு, இந்த படத்தின் புரோமேஷன் பணிகளை படக்குழு செய்திருந்தது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த நிகழ்வுகளும் நடந்தன. தொடர்ந்து இரண்டு நாட்களாக இணையதளங்களில் விஜய்யின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தன. அந்த அளவுக்கு பீஸ்ட் படத்தின் புரோமோஷன் பணிகளை செய்திருந்தது சன்பிக்சர்ஸ் நிறுவனவம். இந்த நிலையில் தான் உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் படம் பார்த்த விஜய் ரசிகர்கள், ‘படம் அந்தளவுக்கு வரல. எதிர்பார்த்தது எதுவுமே இல்ல. பீஸ்ட்டு பீஸ்ட்டுன்னு ரொம்ப எதிர்பார்ப்போட போனோம். ஆனா அந்தளவுக்கு எதுவுமே இல்ல என்ற திரையரங்குகளில் ரசிகர்கள் கூறுவதை காண முடிந்தது.
மேலும், தளபதி படம்னாலே கமர்ஷியலா எண்டெர்டெயின்மெண்டா இருக்கும், ஆனா இதுல எதுமே இல்ல. நெல்சன் விஜய்யை வச்சி செஞ்சிட்டாரு என்று சிலர் கூறுவதையும் திரையரங்குகளில் கேட்க முடிந்தது.
அப்படி, ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த படத்தில் நடித்த நடிகர்களை தூக்கி கொண்டாடும் ரசிகர்கள், அந்த தோல்வி அடைந்தால் மட்டும் ஏன் அந்த படத்தின் இயக்குனரை குறை சொல்கின்றனர். ஒரு வேலை தங்களது தலைவனை விட்டகொடுக்க முடியாது என்பது தானோ.. எது எப்படி இருந்தாலும், இயக்குனர் கூறும் கதை ஹீரோவுக்கு பிடித்து போன பிறகு தான், அந்த கதைக்கான முழு பணிகளில் தொடர்ந்து இறங்குவார் இயக்குனர். அந்த வகையில், பீஸ்ட் கதையும் முதலில் விஜய்க்கு பிடித்து இருக்கத்தான் செய்யும். அப்படி இருக்க பீஸ்ட் படத்தில் எதிர்பார்ப்பை நெல்சன் நிறைவேற்ற வில்லை என விஜய் ரசிகர்கள் கூறுவது எந்த விதத்தில் சரி..
எது எப்படியோ, டாக்டர் படத்தைத் தொடர்ந்து பீஸ்ட் படத்திலும் சீரியஸான சீன்களுடன் டார்க் காமெடியை வைத்து இயக்குநர் நெல்சன் பாஸ் ஆகிவிட்டார் என்றே கூறலாம். பயங்கரவாதிகளின் கோரிக்கையின் பேரில் கைது செய்து வைக்கப்பட்ட அந்த பயங்கரவாத கும்பலின் தலைவனை விடுவித்த நிலையில், கிளைமேக்ஸில் விஜய் ஸ்பேஸ் ஜெட்டில் பண்ணும் வித்தியாசமான சம்பவம் லாஜிக் இல்லா மேஜிக் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பீஸ்ட் படத்தினை சும்மா சிறகுகள் இல்லாமல் பறக்க விட்டு இருக்கிறார் நெல்சன்..