எதற்கெடுத்தாலும் பாரதிய ஜனதா கட்சியை வம்புக்கு இழுக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் என்று அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என். தளவாய் சுந்தரம் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :- இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதலமைச்சரும், கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடியார் விரைவில் வெற்றி வேட்பாளரை அறிவிப்பார்.
ஓபிஎஸ்-ஐ பொறுத்தவரை அவர் கட்சியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டார். அவருக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவராக ஏதாவது பேசிக் கொண்டு வருகிறார். ஏற்கனவே ஒரு தடவை இதைப் போன்று ஒரு செயலில் பன்னீர்செல்வம் ஈடுபட்டு அதிமுகவுக்கு எதிராக சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சி வரக்கூடாது என்று வாக்களித்தவர். அதற்கு அடுத்தாற் போல் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டவர்.
எனவே, இது போன்ற செயல்களில் ஈடுபடுவது நாடறிந்த உண்மையாகும். அவரது நடவடிக்கைகள் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் வகையில் உள்ளது. அந்த வேலையை தான் அவர் செய்து வருகிறார். எதற்கெடுத்தாலும் பாரதிய ஜனதா கட்சியை வம்புக்கு இழுக்கிறார். பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் பாஜக எதுவுமே கூறாத நிலையில், இவராக பேசி வருகிறார். இவரது நடவடிக்கைகள் தான் அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் உள்ளது.
அதிமுகவுக்கான இரட்டை இலையை முடக்கியவர் இவர்தான். அவர் ஒரு சுயநலவாதி. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பாஜக காரணமல்ல . இது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு கட்சிகளையும் சந்தித்து ஆதரவு கேட்பது முறை. அந்த வகையில், அதிமுக அணிக்கு ஆதரவு கொடுத்தாலும், மகிழ்ச்சி கொடுக்காவிட்டாலும் மகிழ்ச்சி, என தெரிவித்தார்.
பாராளுமன்றம் கூடுவது தொடர்பாக அதிமுக சார்பில் ரவீந்திரநாத்தை அழைத்திருக்கிறார்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு. பதிலளித்த அவர், “ஒருவர்தான் எம். பியாக இருக்கிறார். அவரை நாங்கள் கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கி விட்டோம். அவர் ஒருவர் மட்டும் இருப்பதால் அவரை அழைத்துள்ளார்கள். பா.ம.க.வை பொருத்தவரை யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்து விட்டார்கள். அவர்கள் வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டாலும் மகிழ்ச்சி,” எனக் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், பகுதி கழகச் செயலாளர்கள் ஜெவின் விசு, முருகேஸ்வரன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.