ஆஸ்துமாவுக்கான சிகிச்சையில் தலைசிறந்து விளங்கும் தங்கம் மருத்துவமனை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2024, 7:34 pm

ஆஸ்துமா, நாள்பட்டமூச்சுத்திணறல், சுவாசநோய்கள், (COPD) உறக்கத்தில் ஏற்படும் சுவாசப்பாதிப்பு, தொழில் சார்ந்த சுவாச மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் இவையனைத்துக்குமான சிகிச்சையில் நாமக்கல் தங்கம் மருத்துவமனை தலைசிறந்து விளங்குகிறது.

இங்குள்ள நுரையீரல் மறுவாழ்வு மையத்தில், நுரையீரல் மற்றும் சுவாசநோய் மருத்துவர்கள், மிகச்சிறந்த அறுவைசிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். மேலும், சுவாசக்குழாய்- நெஞ்சகப்பகுதி மற்றும் நுரையீரல் ஆகியவற்றை உள்நோக்கும் உயர்தரக்கருவிகளை கொண்டுள்ளதே தங்கம் மருத்துவமனையின் சிறப்பம்சங்களாகும்.

சார்ந்த ஆஸ்துமா குறித்து மருத்துவர் குழந்தைவேல் அவர்கள் கூறியதாவது;-ஆஸ்துமா நோயின் அடிப்படை காரணம் சுற்றுப்புறச்சூழல் ஒவ்வாமை. வனப்பகுதியை ஒட்டிய இடங்களிலும், வயல்வெளி பகுதிகளிலும் வசிப்பவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக மூச்சு மண்டலத்தில் ஏற்படும் வைரஸ் பாதிப்பாலும் ஆஸ்துமா பரவும். மூன்றாவதாக நெஞ்சு எரிச்சல் மற்றும் உணவுக்குழல் பிரச்சனையாலும் ஆஸ்துமா வரவாய்ப்பு உள்ளது .உடல் பருமனாக இருப்பவர்களுக்கும், சிலிக்கான் மற்றும் கார்பன் தொழில் நுட்பத்தில் வேலை செய்பவர்களுக்கும் ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது.

இந்த ஆஸ்துமா உலகம் முழுவதும் பரவியுள்ளது, சிறியவர்கள் முதல்.பெரியவர்கள் வரை பரவக்கூடியது. இந்நோய் வந்தால் 9 வருடங்கள் வரை இருக்கும். இது மழை, பனிப்பொழிவு காலங்களில் அவ்வப்போது வந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகளவில் 27 மில்லியன் பெரியவர்களும், 7 மில்லியன் குழந்தைகளும் இந்தவகை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயின் பாதிப்பு இருந்தால் மூச்சுத்திணறல் ஏற்படலாம். அதிகப்படியான மூச்சுத்திணறலால் நெஞ்சுவலி ஏற்படும் வாய்ப்புள்ளது. ஒவ்வாமையால் இந்த பாதிப்பு ஏற்படும். காற்று, நீர், உணவு மாசுபாட்டால் இந்நோய் பாதிப்பு ஏற்படும். இந்த நோய் பாதிப்பு இருந்தால் மூச்சுக்குழாய் சுருக்கம் அல்லது வீக்கம் ஏற்படும்.

இதற்கு நெபுலைசர் வைத்து உறிஞ்சக்கூடிய மருந்துகளை அளிப்பதன் மூலம் சுலபமாக மூச்சுவிட முடியும். வாய்வழியாக உறிஞ்சக்கூடிய மருந்துகள் மூலம் வைரல் பாதிப்பு ஏற்படாமலும் முச்சுத்திணறல் ஏற்படுவதையும் தடுக்க முடியும்.

இந்த மருத்துவ சிகிச்சை மூலம் நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாது. ஆனால் அதிகமாகாத அளவுக்கு தடுக்க முடியும். தொடர்சிகிச்சை மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

குறட்டை: உடல் பருமனாக இருப்பவர்களுக்கும், தூக்கமாத்திரை எடுத்துகொள்வோருக்கும், தொண்டையில் தொற்று அல்லது அலர்ஜி இருப்பவர்களுக்கும், உணவு மண்டல செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கும் குறட்டை வரும்.

சிலருக்கு மூச்சு நிற்கும் அளவுக்கு ஸ்லீப் ஆப்னியா குறட்டை ஏற்படும். இதை தடுக்க ஸ்லீப்ஆப் என்ற ஒரு கருவி இருக்கும். இதை இரவு படுக்க போகும்போது போட்டுக்கொண்டு படுத்தால் குறட்டை தவிர்க்கப்படும். குறட்டை விடுவோர் இரவில் நேராக படுக்கக்கூடாது. அவர்கள் நேராக படுக்கும்போது நாக்கு பின்புறம் அழுந்தி மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படும். எனவே, குறட்டை நோய் பாதிப்பு இருப்பவர்கள் இடது அல்லது வலதுபுறம் திரும்பி படுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்துமா அறிகுறிகள் குறித்து மருத்துவர் கௌதமி கூறியதாவது;-
அடிக்கடி மூச்சு விடுதலில் சிரமம், மூச்சுவிடும்போது விசில் சத்தம் வருதல், வறட்டுஇருமல், நெஞ்சுஇருக்கம், மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல், மூக்கில் சளி ஒழுகுதல், இந்த அறிகுறிகள் இருந்தால் அருகில் இருக்கும் நுரையீரல் சிகிச்சை நிபுணரை அணுகி ஆஸ்துமாவுக்கான சிகிச்சை பெறுவது அவசியமானது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு இன்ஹெலர் பயன்படுத்துவது சிறந்த சிகிச்சை முறை. இதை பயன்படுத்துவதால் நேராக நுரையீரலுக்கு சென்று உடனே பலனை தரும். இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுவதை தடுக்கும். இன்ஹெலர் பயன்படுத்தலில் இரண்டு முறை உள்ளது.

  1. இன்ஹெலர் டிரைபரவுடர்
  2. மீட்டர்டோஸ் இன்ஹெலர்

டிரைபவுடர் இன்ஹெலர்:

இதில் இன்ஹெலர் கருவியில் கேப்சூலை போட்டு வாயில் வைத்து இழுக்க வேண்டும். இதை சிறுவர்களுக்கும் வயதானவர்களுக்கும் கொடுப்பதை தவிர்க்கலாம்.

மீட்டர்டோஸ்இன்ஹெலர்:

இது பஃபர் என்று அழைக்கப்படும். இதில் ஸ்பேசர் வைத்து மருந்து இழுக்கப்படும். சில நேரங்களில் ஸ்பேசர் மருந்து வைத்து இழுக்கும் போது மருந்து வெளியே செல்லவும் அல்லது தொண்டையில் அடித்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. அதனால் கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்துமா மூச்சுப்பயிற்சி குறித்து மருத்துவர் ராஜ்குமார் கூறியதாவது;
ஆஸ்துமா நோயாளிகளுக்கு பல்மொனரி ரிஹேபிலிடேசன் என்ற மூச்சுப்பயிற்சி சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.

Exercise Induced Bronchoconstriction-யின்அறிகுறிகள்:

வீசிங் இருக்கும். தொடர்ச்சியான வறட்டுஇருமல் இருக்கும். பயிற்சியின்போது நெஞ்சுப்பகுதி கடினமாக இருக்கும். ஏற்கெனவே ஆஸ்துமா இருந்தால் அதற்கான சிகிச்சை முறையை எடுத்து கொண்டிருக்க வேண்டும். உடல் பருமனை பராமரிக்க வேண்டும். காற்றுமாசு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பயிற்சி முறைக்கு முன்னால் இன்ஹெலரை பயன்படுத்த வேண்டும். பயிற்சியின்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அதை நிறுத்த வேண்டும். பயிற்சிக்குமுன் வார்ம்அப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நுரையீரல் பிரச்சனை குறித்து மருத்துவர் சரவணராஜமாணிக்கம் கூறியதாவது;- நுரையீரலுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும், ஆஸ்துமா சிகிச்சை பெறுவோர்களுக்கும், சிஓபிடி பெறுவோர்க்கும் எளிமையாக சுவாசிக்க தங்கம் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் 24 மணிநேரமும் சேவை செய்யத்தயாராக உள்ளனர்.

DR Saravana Rajamanickam

உங்களுக்கு மூச்சுத்திணறல் இருக்கிறதா? காலையில் எழுந்ததும் மூச்சுத்திணறலாக உள்ளதா? மூச்சுத்திணறலின் போது விசில் சவுண்டு வருகிறதா?

இந்த அறிகுறிகள் இருந்தால் ஆஸ்துமா இருக்கலாம். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க தங்கம் மருத்துவமனையில் அர்ப்பணிப்போடு சேவை செய்யும் மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் தயாராக உள்ளனர். இவர்கள் மூலம் இந்த சீசனில் பாதிக்கப்படும் ஆஸ்துமா நோயாளிகள் பலனடையலாம்.

உங்க குழந்தைக்கு அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் இருக்கா? இப்படி ஒரு குழந்தைக்கு பாதிப்பு இருந்தால் ஆஸ்துமா பரிசோதனை செய்ய வேண்டும். ஆய்வின்படி 10-11 வயது குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவதாக கூறுகிறது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு தங்கம் மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குழந்தைகளின் வளர்ச்சியை பாதுகாக்க வேண்டும்.

அதிகமாக சிகரெட் பிடிப்பவர்களுக்கு நுரையீரலில் உள்ள பல லட்சம் செல்கள் அழிந்து போகும். இது எம்பைசீமா என்று அழைக்கப்படுகிறது. எம்ஃபைசீமா சிகரெட் பிடிப்பவர்களுக்கும், பீடி பிடிப்பவர்களுக்கும் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தும்.

20-30 ஆண்டுகளாக புகைப்பவர்களுக்கு நுரையீரல் செல்கள் அழிந்து மூச்சுவிட முடியாத நிலை ஏற்படும். இதனால் ஆக்சிஜனை சுவாசிக்க முடியாதநிலை ஏற்படும். எம்ஃபைசீமா கொடூரமான நோய். இந்த நோய்க்கு தங்கம் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Website : https://thangamcancercenter.com/

  • Kushboo Disappoint With Annathe Movie with Rajini ரஜினி கூட நடிக்க வைச்சு என்னை ஏமாத்திட்டாங்க : நடிகை குஷ்பு வருத்தம்!!
  • Views: - 83

    0

    0

    Leave a Reply