17 வயது சிறுமிக்கு பிறந்தது குழந்தை… தந்தையான 12 வயது சிறுவன்… திடுக்கிட்டு போன போலீசார்..!!

Author: Babu Lakshmanan
21 April 2022, 9:56 am

தஞ்சை : 17 வயது சிறுமியை தாயாக்கிய 12 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மானோஜிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி, திருமணம் ஆகாமலேயே கர்ப்பமானார். இதையடுத்து, பிரசவவலி அதிகரிக்கவே குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை அனைத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது, அந்த 17 வயது சிறுமி கூறியதாவது :- எங்கள் வீட்டு அருகே உள்ள 12 வயது சிறுவன் தன்னுடன் நெருக்கமாக பழகினார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். தற்போது குழந்தை பிறந்துள்ளது, என்று போலீசாரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியின் பெற்றோரிடமும் விசாரித்தனர்.

இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 12 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?