6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 21 வயது நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
24 January 2022, 2:33 pm

தஞ்சை : தஞ்சை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியை சாக்லேட் கொடுத்து, அப்பகுதியில் உள்ள காலி திடலுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் அழைத்துச் சென்று முறைகேடாக நடந்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து விஜய் (21) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 6237

    0

    0