அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை : கூட்டுத்தலைமைதான் எப்போதும்… வைத்திலிங்கம் நம்பிக்கை..!!

Author: Babu Lakshmanan
24 June 2022, 6:29 pm

தஞ்சை : அதிமுக ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவை முடித்து விட்டு தஞ்சை வந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்திற்கு தஞ்சை அருகே மேலவஸ்தாச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அதிமுக ஒன்றுபட்டு இருக்கவேண்டும். கூட்டுத் தலைமை ஏற்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை. பதவிகள் நீடிக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் மனு தாக்கலுக்கு தான். தேர்தல் ஆணையத்தை சந்திக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். கூட்டு தலைமைதான் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. என்றார். கூட்டுத் தலைமை இல்லை என்றால், அப்போது, அது குறித்து தெரிவிக்கிறேன், எனக் கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி