தஞ்சை தேர் விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு… பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வைத்தியலிங்கம்..!!

Author: Babu Lakshmanan
27 April 2022, 6:17 pm

தஞ்சையில் தேர் விபத்து ஏற்பட்டு 11 பேர் உயரிழந்த சம்பவம் நடந்த பகுதிகளில் அமைச்சர் மற்றும் அதிமுகவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் நேற்று இரவு அப்பர் குருபூஜை விழாவின் போது தேரின் மீது மின்சார உயிரிழந்த கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.5 லட்சமும், மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அதிமுக, திமுக கட்சிகளும் தங்களின் பங்கிற்கு நிவாரணத்தை அறிவித்துள்ளன.

இதனிடையே, திருவிழாக்காலங்களில் போதிய பாதுகாப்பு வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்காததே காரணம் என்று அதிமுக குற்றம்சாட்டி வருகிறது.

இதனிடையே, தேர் விபத்து ஏற்பட்ட பகுதியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது, தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டிகேஜி நீலமேகம் திருவையாறு, சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடன் சென்று விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் களிமேடு தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தஞ்சை மாவட்டம் களிமேடு விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் பணிய மறுத்த கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்தி மொழி விவகாரம்… பிரபல நடிகர்கள் மோதல்

இந்தி மொழி தேசிய மொழி இல்லையென்றால், உங்கள் தாய் மொழியில் எடுக்கப்படும் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்..?

இந்தி எப்போதுமே எங்களின் தாய்மொழி மற்றும் தேசிய மொழி

கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கு இந்தி நடிகர் அஜய் தேவ்கன் பதில்

மீண்டும் புதுப்பொலிவு பெறும் ஸ்மார்ட் சிட்டி பகுதிகள்… கோவை மக்கள் மகிழ்ச்சி!!

கோவை : பராமரிக்கப்படாமல் கிடந்து வந்த கோவை ஸ்மார்ட் சிட்டி தற்போது புதுப்பொலிவு பெறுவதால் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவையின் புதிய அடையாளமாக மாறிய ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, உக்கடம் பெரிய குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஐ லவ் கோவை வடிவமைப்பை காண மக்கள் திரண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், அந்தப் பகுதிகளில் எல்லாம் புதர்கள் மண்டியும், செடி, கொடிகள் படர்ந்தும் காணப்பட்டன. இதனால், பூச்சி, புழு அச்சுறுத்தல் இருக்குமோ..? என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்தது. எனவே, இந்த புதர்களை அகற்றி, பொதுமக்கள் அச்சமின்றி பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவை ஸ்மார்ட்சிட்டி பகுதிகளில் மண்டிக்கிடந்த புதர்களையும், செடிகளையும் அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடையும் போது, இன்னும் அழகாக அந்தப் பகுதிகள் காட்சியளிக்கும் என்பதா, பொதுமக்களின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் புதுப்பொலிவு பெறுவதால் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1310

    0

    0