30 ஆண்டுகளுக்கு தஞ்சையில் குடிநீர் பஞ்சம் இருக்காது… விரைவில் அப்படியொரு திட்டம் : தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் தகவல் !!!
Author: Babu Lakshmanan11 March 2022, 1:50 pm
தஞ்சை : கொள்ளிடம் ஆற்றில் 2 வது, 3 வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப் பட உள்ளதால் தஞ்சை மாநகராட்சியின் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சம் இருக்காது என மேயர் சன் ராமநாதன் உறுதி அளித்துள்ளார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் மற்றும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தஞ்சை மாநகராட்சி மீன் மார்க்கெட் மற்றும் 12 வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் அவர் கூறியதாவது :- தினமும் 2 வார்டுகள் வீதம் நேரடியாக சென்று பொதுமக்களிடம் அவர்கள் தேவை கேட்டு அதற்கான நிதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாநகராட்சியில் உள்ள சாலைகள் அனைத்தும் மிக மோசமாக உள்ளது. அதற்கான நிதி பெற்று சாலைகள் அனைத்தும் சரி செய்யப்படும். கடந்த 5 ஆண்டுகளாக தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் முறையாக செயல்படாமல் உள்ளது. கட்டிடங்கள் அனைத்தும் பயன்படுத்தாமல் பழுதடைந்துள்ளது. இதற்கு பதிலாக புதிய மீன் மார்க்கெட் கட்டித்தரப்படும்.
பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். இதன்மூலம் தங்கள் குறைகளை வீட்டில் இருந்தபடியே மக்கள் தெரிவிக்க முடியும். தஞ்சை மாநகராட்சியில் வரும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வராத வகையில் கொள்ளிடத்தில் இருந்து இரண்டாவது, மூன்றாவது குடிநீர் திட்டத்தின் மூலம் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ர் அதிமுக உறுப்பினர் சொந்த செலவில் குடிநீர் வழங்குவது தேவையில்லாதது தங்களிடம் தெரிவித்தால், குடிநீர் லாரிகள் அனுப்பி வைக்கப்படும், எனவும் கூறினார்.