போர்க்களமாக மாறிய தஞ்சை திமுக ஆபிஎஸ்… திமுக உட்கட்சி தேர்தலில் ஒருதலைபட்சம்.. இருதரப்பினராக பிரிந்து சரமாரி தாக்குதல்.. !!
Author: Babu Lakshmanan30 June 2022, 9:53 am
தஞ்சை திமுக உட்கட்சி தேர்தலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் திமுக மாவட்ட அலுவலகம் போர்களமாக மாறியது.
தஞ்சையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் திமுக பல்வேறு அணிகளுக்கான உட்கட்சி தேர்தல் நடந்தது. இதில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம் ஆதரவாளர்களும், தஞ்சை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் ஆதரவாளர்களும் போட்டியிட்டனர்.
இரு முனை போட்டியில் தேர்தல் பார்வையாளர்கள் ஒரு தலைபட்சமாக துரை.சந்திரசேகரன் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்கியதால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முரசொலி ஆதரவாளர்கள், எதிர்த்து போட்டியிட்ட பழனிமாணிக்கம் ஆதரவாளரான ஜெயராஜ் என்பவரை சரமாரியாக அடித்து உதைத்து புரட்டி எடுத்தனர்.
மேலும் கட்சி அலுவலகத்தை விட்டு காரில் சென்ற பழனிமாணிக்கம் காரை மறித்து அவரை தரக்குறைவாக திட்டினர். இந்த தகவல் அறிந்து வந்த பழனிமாணிக்கம் ஆதரவாளர்கள் கட்சி மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் கட்சி அலுவலகம் போர்களமாக மாறியது.