மேகதாது அணைக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கியதற்கு எதிர்ப்பு : கர்நாடகாவை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
Author: Babu Lakshmanan9 March 2022, 4:13 pm
தஞ்சை : காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை ரயில் நிலையம் முன்பு சமவெளி விவசாயிகள் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் ரயில் நிலையம் முன்பு சமவெளி விவசாயிகள் இயக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றம் காவிரியின் குறுக்கே அணை கட்டக்கூடாது என வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்திற்கு வரக்கூடிய உபரி நீரையும் தடுக்கும் வகையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 67 டிஎம்சி நீர் தேக்கும் வகையில் அணை கட்ட முதல்கட்டமாக கடந்த நிதியை பட்ஜெட்டில் கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சமவெளி விவசாய இயக்கத்தினர் தஞ்சை ரயில்நிலையம் முன்பு கர்நாடக அரசையும், மறைமுகமாக துணை நிற்கும் மத்திய அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து வெளியே வந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.