ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம்… பணம் கேட்டு மிரட்டி வந்த நபருக்கு நேர்ந்த கதி…!!

Author: Babu Lakshmanan
12 July 2022, 10:07 am

தஞ்சை : தஞ்சை அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ராஜகிரியை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மகள் பிரசன்னா ரூபி (23). இவர் தஞ்சை அருகே களிமேடு ஜெபமாலைபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் அபிஷேக் (24) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, பிரசன்னா ரூபி வேளாங்கண்ணியில் வேலைக்கு சேர்ந்தார். இதை அறிந்த அபிஷேக் வேளாங்கண்ணி சென்று பிரசன்னா ரூபியிடம் காதலிப்பதாக தெரிவித்து திருமணம் செய்து கொள்ளலாம், என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய பிரசன்னா ரூபியும், அபிஷேக்குடன் பழகி வந்துள்ளார். மேலும், இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அபிஷேக், பிரசன்னா ரூபியை பிரிந்து ஊருக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. பிரசன்னா ரூபி போன் செய்தால் அபிஷேக் எடுப்பதில்லை என்றும், பிரசன்னா ரூபியிடம் பணம் கேட்டு அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரசன்னா ரூபி இது குறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அபிஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 963

    0

    0