உறவினர் வீட்டுக்கு சென்ற 15 வயது சிறுமி கடத்தல்… போலீஸில் தந்தை புகார்..!!
Author: Babu Lakshmanan7 May 2022, 10:45 am
தஞ்சாவூர்: உறவினர் வீட்டிற்கு சென்ற தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அருகே வல்லம் காளவாய் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் குமார் (52). இவரது 15 வயது மகள் கடந்த 4ம் தேதி அன்று உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் அந்த பெண்ணை காணவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து தனது மகளை குமார் பல இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையில் தனது மகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் குமாருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குமார் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் வாகரக்கோட்டையை சேர்ந்த கலியபெருமாள், ரஞ்சித், மகேந்திரன் ஆகிய மூவரும் தனது மகளை கடத்திச் சென்று விட்டனர் என்று தெரிவித்து உள்ளார். இந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.