தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்ததால், இளைஞரை கொடூரமாக அடித்து கொன்ற மாணவியின் அத்தை மகனை காவல்துறை தேடிவருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே வாளமர் கோட்டை பகுதி வாண்டையார் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் ஆனந்த் (21). இவர் ஐ.டி.ஐ. படித்துள்ளார். ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவி தங்கை முறை என்பதால் இரு வீட்டாரும் கண்டித்துள்ளனர். ஆனால் ஆனந்த் தனது காதலை விடவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், சூரக்கோட்டையை பகுதியை சேர்ந்த மாணவியின் அத்தை மகனான உதயகுமார் (25) இது குறித்து கண்டித்துள்ளார். இப்பிரச்சினை தொடர்பாக நேற்று இரவு வாளமர்கோட்டை கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் நின்று கொண்டிருந்த ஆனந்தை உதயகுமார் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, “என் அத்தை மகளை நீ காதலிக்க கூடாது. அவளை விட்டு விலகி விடு என ஆனந்திடம் கூறினார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த உதயகுமார் மண்வெட்டியால் ஆனந்தின் பின் தலை மற்றும் முகத்தை சிதைத்தும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலே ஆனந்த் உயிரிழந்துவிட்டார்.
தகவலறிந்த தாலுக்க காவல்துறையினர் உடலை கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
This website uses cookies.