டீக்கடையில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து ; உயிர்தப்பிய உரிமையாளர்… இரு பைக்குகள் எரிந்து நாசம்..!!

Author: Babu Lakshmanan
18 August 2022, 1:10 pm

தஞ்சை கீழவாசல் பகுதியில் டீ கடையில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் காயம் அடைந்தார். இரண்டு, இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து எலும்புக் கூடானது.

தஞ்சை கீழவாசல் நான்கு வழி சாலை சந்திப்பில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது கண்ணையன் டீ ஸ்டால். கடையின் முன்பு சிலிண்டர் அடுப்பில் வைத்து பலகாரம் சுடும் போது, எதிர்பாரதவிதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியாகி உள்ளது.

இதனை பலகார மாஸ்டர் கவனிப்பதற்குள் கியாஸ் அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் சிதறி தீப்பற்றத் தொடங்கியது. இதனை அடுத்து, டீ கடைக்குள் இருந்தவர்கள், டீ அருந்தி கொண்டு இருந்தவர்கள் அங்கு இருந்து தப்பினர். இருந்த போதிலும், டீ கொளுந்து விட்டு எரிந்ததில், கடை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடானது.

கடை உரிமையாளர் பாலமுருகனுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்து குறித்து தஞ்சை கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 653

    0

    0