தஞ்சை பெரிய கோவில் பக்தர்கள் கவனத்திற்கு… ஆடை கட்டுப்பாடு விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவு!!!

Author: Babu Lakshmanan
30 November 2023, 2:17 pm

தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் கட்டிடக்கலைக்கு முன்னுதாரணமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வருகிறது. இந்தக் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து சென்று உள்ளனர்.

சதய விழா, நவராத்திரி கலை விழா, சித்ரா பவுர்ணமி விழா, ஆஷாட நவராத்திரி விழா, ஐப்பசி மாத அன்னாபிஷேகம் போன்ற சிறப்பு விழாக்கள் இந்தக் கோவிலின் முக்கிய அம்சங்களாகும்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தஞ்சை பெரிய கோவில் வளாகத்திற்குள் வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் வேட்டி, பேண்ட், சட்டை அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவை அணிந்து வர வேண்டும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அரைக்கால் சட்டை அணிந்து வருவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • தெலுங்கில் அறிமுகம் ஆகும் விக்ரம் பிரபு…படத்தின் டீசரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து..!