சினிமா பட பாணியில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி… அலாரம் அடித்ததால் ஷாக்கான கொள்ளையர்கள் செய்த செயல்…!!

Author: Babu Lakshmanan
5 July 2022, 9:20 am

தஞ்சையில் நகை அடகு கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, அலாரம் அடித்ததை அடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை அருகே உள்ள கொல்லங்கரை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மறுங்குளம் நான்கு ரோடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற பிறகு, கொள்ளையர்கள் அருகிலுள்ள மெடிக்கல் ஷாப் சட்டத்தை உடைத்து மெடிக்கல் ஷாப் உள்ளிருந்து அடகு கடை சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முற்பட்டுள்ளனர்.

அப்போது, அடகு கடையில் வைக்கப்பட்டுள்ள அலாரம் அலறியது. இதையடுத்து, கிராம பொதுமக்கள் கூடியதால் கொள்ளையர்கள் 6 பேரும் தப்பி ஓடினர். அப்போது, கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்கியதில் ஸ்ரீராம் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கடையில் இருந்த 40,000 ரொக்கம் மற்றும் லேப்டாப்பை தூக்கிக்கொண்டு கொள்ளையர்கள் ஓடிய போது, ஊர் பொதுமக்கள் துரத்தியதால் லேப்டாப்பை போட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!