மொத்த வியாபாரியிடம் 7 கிலோ நகை கொள்ளை… நகைப்பையை இலாவகமாக திருடிய யூனிஃபார்ம் கும்பல்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
1 June 2022, 1:34 pm

தஞ்சையில் நகை மொத்த வியாபாரியிடம் இருந்து நூதன முறையில் சுமார் 7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்தவர் மணி (52). நகை மொத்த வியாபாரியான இவர் சென்னையிலிருந்து தஞ்சையில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இவர் சென்னையிலிருந்து தஞ்சைக்கு வந்து நகைகடைகளுக்கு நகைகளை கொடுத்துள்ளார்.

பின்னர் இரவு டிபன் சாப்பிடுவதற்காக தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு நகைகள் அடங்கிய பையை கீழே வைத்து விட்டு டிபனுக்கு பணம் எடுத்து கொடுத்துள்ளார்.

அப்போது அவரை சுற்றி ஒரே நிறத்தில் ஆடை அணிந்த 9 பேர் வந்து நின்றுள்ளனர். பணம் கொடுத்துவிட்டு தனது பையை எடுக்க பார்த்த போது கீழே வைத்திருந்த நகைப்பையை காணவில்லை. மேலும் அவரை சுற்றி ஒரே நிறத்தில் ஆடை அணிந்து நின்றிருந்தவர்களையும் காணவில்லை.

தொடர்ந்து மணி உணவகத்தில் தனது நகைப்பையை தேடி பார்த்துள்ளார். ஆனால் பை கிடைக்கவில்லை. அதில் சுமார் 7 கிலோ நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சீருடை அணிந்து நின்றிருந்தவர்கள் நூதன முறையில் மணியிடம் இருந்து நகைப்பையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் உண்மைதானா என்பது குறித்து விசாரணை செய்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 718

    0

    0