திருமணம் இல்லை… வேலையும் கிடைக்கல… விரக்தியில் வாலிபர் தற்கொலை : தஞ்சையில் அரங்கேறிய சோகம்…!!!

Author: Babu Lakshmanan
5 March 2022, 8:05 pm

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் ஒருவர் தஞ்சையில் மாநகராட்சி குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சி மேலவீதி பாலோப்பாசந்து பகுதியைச் சேர்ந்த வாலிபர் ராஜசேகர். நேற்று வீட்டை விட்டு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மேலவீதியில் உள்ள அய்யங்குத்தில் ராஜசேகர் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ராஜசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமணமாகாத வாலிபரான ராஜசேகர் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில், வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்ததாகவும், நேற்று கூட கும்பகோணத்தில் வேலைக்கான நேர்காணலுக்கு சென்று திரும்பிய நிலையில், அய்யங்குளத்தில் குதித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?