அங்கீகாரத்துக்கே அங்கீகாரம்… உங்க வாழ்த்துக்கு நன்றி : உச்சி குளிர்ந்த சீமான்..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2024, 4:28 pm

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் புதுடெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். பிரதமருடன் 30 மந்திரிகள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்லும் முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், “மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3-வது முறையாக மோடி பதவி ஏற்கிறார், இது அவருடைய சாதனை.

இம்முறை வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது என்று கூறினார்.மேலும், மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க: மோடியின் செங்கோல் நாடகம்… தமிழக மக்கள் கொடுத்த தரமான பதில் : காங்கிரஸ் சரமாரி விமர்சனம்!!

இதனையடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், “நாடாளுமன்றத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 322

    0

    0