வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் ; தாசில்தார் மற்றும் அவரின் ஓட்டுநர் கைது..!!

Author: Babu Lakshmanan
21 July 2022, 3:32 pm

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற தாசில்தார் ராஜசேகரன் மற்றும் அவரது ஓட்டுநரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா உட்பட்ட சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் தந்தை இறந்த நிலையில், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார்.

வாரிசு சான்றிதழ் பெற அரவக்குறிச்சி வட்டாட்சியர் ராஜசேகரன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிசாமி, கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில், பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெறும் போது, கையும் களவுமாக தாசில்தார் ராஜசேகரனை மற்றும் அவரது வாகன ஓட்டுனர் சுரேந்திரன் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 901

    0

    1