அந்த குழந்தை இப்போ தாயில்லா பிள்ளை : உங்களுக்கு இப்ப மகிழ்ச்சியா? பிரபல யூடியூபரை விளாசிய சின்மயி!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2024, 1:57 pm

அந்த குழந்தை இப்போ தாயில்லா பிள்ளை : உங்களுக்கு இப்ப மகிழ்ச்சியா? பிரபல யூடியூபரை விளாசிய சின்மயி!

அந்த குழந்தை இப்போ தாயில்லா பிள்ளை : உங்களுக்கு இப்ப மகிழ்ச்சியா? பிரசாந்த்தை டேக் செய்து சின்மயி விளாசல்!

கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மேற்கூரையில் ஒரு கைக்குழந்தை தவறி விழுந்துள்ளது, இந்த மேற்கூரையில் இருந்து குழந்தை கீழே விழ இருந்த நிலையில், அந்த குடியிருப்பு வாசிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு குழந்தையை மீட்டுள்ளனர்.இதனையடுத்து மேற்கூரையில் விழுந்து கிடந்த குழந்தையை மீட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதால், இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் பால்கனியில் இருந்து துடைப்பத்தை தாய் கையில் எடுத்தபோது கையில் இருந்து தவறி குழந்தை விழுந்து விட்டதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் குழந்தையின் தாயை நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். குழந்தையை சரியான முறையில் கவனிக்கவில்லையென விமர்சிக்கப்பட்டது. இந்தநிலையில் குழந்தையின் தாய் தற்கொலை செய்ததாக நேற்று தகவல் பரவியது.

மேலும் படிக்க: அதிமுக குறித்து கட்டுக்கதை.. பாஜகவுக்கு நாங்க ஏன் போகணும்? திமுக IT WING மீது எஸ்பி வேலுமணி காட்டம்!

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன், இவரது மனைவி ரம்யா, இவர்களது சொந்த ஊர் காரமடை, இவர்கள் சென்னையில் திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ள அப்பார்ட்மெண்டில் குடியிருந்துள்ளார்கள். குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அங்கிருந்து சொந்த ஊரான காரமடைக்கு வந்துள்ளார்கள்.நேற்று வீட்டில் அனைவரும் வெளியில் சென்றுள்ளனர். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உடலை கைப்பற்றியவர்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட ரம்யா சிறிது நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எல்லை மீறிய விமர்சனங்களால் அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதுவே தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

குறிப்பாக பிரபல யூடியூபர் பிரசாந்த் ரங்கசாமி, பால்கனியில் தவறி விழுந்த குழந்தை மீட்ட வீடியோவை பகிர்ந்து அந்த குழந்தையை பெற்றவர்களுக்கு- உங்களுக்கு குழந்தை ஒரு கேடா என பதிவிட்டிருந்தார்.

இது குறித்து பிரபல பின்னணி பாடகி சின்மயி பிரபல யூடியபூர் பிரசாந்த் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த பெண் இறந்ததற்கு காரணமான யூடியூபர் பிரசாந்த் ரங்கசாமியை கைது செய்வீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

பால்கனியில் ஒரு கையில் சாப்பாடு வைத்துக் கொண்டு ஒரு கையில் குழந்தையை பிடித்து இருந்தததால் ஊட்டும் போது குழந்தை துள்ளியதால் தவற விட்டுவிட்டார். இது ஒரு விபத்து, ஆனால் இப்போது அந்த குழந்தை தாயில்லாத பிள்ளை. இப்போ மகிழ்ச்சியா? என்ன ஒரு கலாச்சாரம், என்ன ஒரு சமுதாயம் என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்