அமைச்சர் பிடிஆர் கேக் வெட்டும் போது அன்பில் மகேஷ் சொன்ன ‘அந்த’ வார்த்தை : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2023, 2:00 pm

தமிழ்நாடு அரசியலில் ஆக்டிவாக இருக்கும் அமைச்சர்களில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமானவர்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் 20ம் தேதி நடக்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான தீவிரமாக பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் பட்ஜெட் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான சில அப்டேட்களை வெளியிட உள்ளார். இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ஈரோடு கிழக்கில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு கஜானாவை அதிமுக காலி செய்துவிட்டது. அது மீட்டு எடுக்க தாமதம் ஆகிவிட்டது. இப்போதுதான் கஜானா மீண்டு வருகிறது. இந்த நிலையில் மார்ச் மாதம் இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் பட்ஜெட் பணிகளுக்கு இடையில் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பிறந்தநாள் விழா கொண்டாடினார்.

தனது 57வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார். அப்போது மாஸ்க் அணிந்தபடி பிடிஆர் கேக் வெட்டினார். அப்போது ஹாப்பி பர்த் டே பாட்டு பாடிய அன்பில் மகேஷ், ஹாப்பி பர்த் டே ஆங்கிரி பேர்ட் என்று கூறினார்.

அமைச்சர் பிடிஆர் வேகமாக கோபம் அடைய கூடிய நபர். சட்டென அவருக்கு பல விஷயங்களில் கோபம் வரும். அதை பொது நிகழ்ச்சிகளில் காட்டு வழக்கமுடையவர்.

இதனால் திமுக நிர்வாகிகள் அவரை செல்லாமாக ஆங்கிரி பேர்ட் என்று அழைப்பது உண்டு. இன்றும் அதேபோல்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பிடிஆர் பழனிவேல்தியாகராஜனை ஆங்கிரி பேர்ட் என்று அழைத்தார்.

இதை கேட்டதும் சட்டென ஒரு நிமிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யோசித்து திரும்பி பார்த்தார். அங்கே இருந்த அமைச்சர்கள் மூர்த்தி உள்ளிட்டோர் இதை கேட்டு வெடித்து சிரித்தனர். அமைச்சர் பிடிஆரும் சிரித்தபடி இவர்களுக்கு கேக் ஊட்டிவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!