செல்போனில் சார்ஜ் போட்டு பேசிய 22 வயது டீ மாஸ்டர் : கண்ணிமைக்கும் நேரத்தல் நடந்த துயரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2023, 5:43 pm

வட சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கெனால் தெரு பகுதியில் தனியாக வசித்துவரும் டீ மாஸ்டர் நேற்று இரவு அவரது வீட்டில் அவரது செல்போனை சார்ஜ் போட்ட வாரு பேசிக் கொண்டிருந்த போழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்

அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்ததின் பேரில் வண்ணார பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர் பெயர் காமராஜ் ( 22) என்றும் மெரினாவில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார் என்றும் இங்கு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

நேற்று பணி முடித்து இரவு வீட்டிற்கு வந்தவர் செல்போனில் சார்ஜ் போட்டு பேசிக் கொண்டிருந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்

மேலும் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 524

    0

    0