களைகட்டிய விநாயகர் சதுர்த்தி : ஆசியாவிலேயே 2வது உயரமான விநாயகர் சிலைக்கு பிரம்மாண்ட அலங்காரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2023, 10:24 am

களைகட்டிய விநாயகர் சதுர்த்தி : ஆசியாவிலேயே 2வது உயரமான விநாயகர் சிலைக்கு பிரம்மாண்ட அலங்காரம்!!

நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பல்வேறு அலங்காரங்களால் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று சந்தனகாப்பு அலங்காரம் செய்யபட்டு 4 டன் மலர்களால் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

புலியகுளம் விநாயகர் சிலை ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான சிலையாகும் இதன் உயரம் 19 அடி, அகலம் 10 அடி, எடை 190 டன் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு காலை முதல ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இதே போல் ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!