14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 57 வயது கோவில் பூசாரி… மறக்க முடியாத தண்டனை கொடுத்த கோர்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2024, 12:33 pm

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 57). இவர் கோவில் பூசாரி ஆவார்.

கடந்த 2021-ம் ஆண்டு 14 வயது சிறுமி கோவிலுக்கு சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுமியை ஏமாற்றி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், கர்ப்பமாக்கிய குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரிவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டல் பிரிவுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, இதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu