யார் முந்துவது என்ற போட்டியால் ஏற்பட்ட விபத்து : அரசு பேருந்து தனியார் பள்ளி பேருந்து மோதல்.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2022, 8:53 pm

திருப்பூர் : நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் காங்கேயம் சாலை, நாச்சிபாளையம் பகுதியில் திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்தும், திருப்பூர் நோக்கி சென்ற தனியார் பள்ளி பேருந்தும் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்ற நிலையில், இரு பேருந்துகளும் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகளும், தனியார் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த மாணவர்களும் காயமின்றி மீட்கப்பட்டனர்.

அதிக வேகத்தில் பேருந்து இயக்கப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  • lokesh kanagaraj movie actor sri present fitness photo shocking fans லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…