கவனம் சிதறியதால் நடந்த விபத்து.. பைக்கில் வந்த இளைஞரை தூக்கி வீசிய கார் : அதிர வைத்த அதிர்ச்சி வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2023, 9:43 pm
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (43).கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருகின்றார்.
காளிவேலம்பட்டி பிரிவில் புதியதாக கட்டப்படும் கட்டிடத்தில் பணி புரிந்து வருகின்றார்.இன்று மதிய உணவு இடைவெளியின் போது கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழி பாதையில் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.சாலையை கடக்க முயன்ற போது கோவை நோக்கி சென்ற சொகுசு கார் சுரேஷின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ் சாலையில் மையத்தில் இருந்த தடுப்புச்சுவர் மீது விழுந்து பலத்த காயமடைந்தார்.விபத்தினை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சுரேஷை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார்.சுரேஷ் தூக்கி வீசப்படும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.