மழை நீரை அகற்ற காவலர் செய்த செயல்.. வைரலான வீடியோ : குவியும் பாராட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan20 May 2024, 9:34 am
மழை நீரை அகற்ற காவலர் செய்த செயல்.. வைரலான வீடியோ : குவியும் பாராட்டு!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை ஆற்றில் இருந்து வினாடிக்கு பூர்வீக பாசன விவசாயத்திற்காக 900 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வைகை ஆற்றின் இணப்புச்சாலையில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செல்லூர் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் தீடீரென தணீருக்குள் நடந்து சென்று தண்ணீர் வெளியேறும் பகுதியில் சிக்கியிருந்த குப்பைகளையும், ஆகாயத்தாமரை, பிளாஸ்டிக்கழிவுகளை கைகளால் அகற்றினார்.
மேலும் படிக்க: 17 மணி நேரத்திற்கு பின் கிடைத்த தடயம்.. ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி.. பயணம் செய்த அனைவரும் உயிரிழப்பு!
மேலும் கையில் குச்சியை எடுத்துக்கொண்டு தேங்கியிருந்த குப்பைகளையும் அகற்றினார். காவலர்கள் தூய்மைப்பணியாளர் போல நீரில் இறங்கி குப்பைகளை கைகளால் அகற்றியது பொதுமக்கள் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.