அரசு பேருந்தில் அதிரடி காட்டிய நடிகை… வீடு புகுந்து தூக்கிய போலீசார்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2023, 11:46 am

அரசு பேருந்தில் அதிரடி காட்டிய நடிகை… வீடு புகுந்து கைது செய்த போலீசார்.. வைரலாகும் வீடியோ!!

நேற்று முன் தினம் போருர்- குன்றத்தூர் சாலையில் சென்ற அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் அடித்து கீழே இறக்கிவிட்டார்.

பேருந்தில் மாணவர்களை தாக்குவதும் தகாத வார்த்தையில் அதேபோல் நடத்துனரையும் தகாத வார்த்தையில் பேசி இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிய நிலையில் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சரவணன் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் மாணவர்களை தாக்கியது நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பதும் தெரிய வந்த நிலையில் நடிகை ரஞ்சனா மீது உட்பட இருவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது,மாணவர்களை தாக்கியது, ஆபசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, சிறுவர்களை தாக்குவது என 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை கைது செய்யப்பட்டார்.

  • Famous Malaysian singer commits suicide? Tragic end with mother!! பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!