கூட இருந்தே விஜய்க்கு குழி பறித்த நிர்வாகி… தமிழக வெற்றி கழகத்தில் இருந்து அதிரடி நீக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2024, 10:18 am

கூட இருந்தே விஜய்க்கு குழி பறித்த நிர்வாகி… தமிழக வெற்றி கழகத்தில் இருந்து அதிரடி நீக்கம்!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாகவே அரசியலில் நுழைவார் என்ற பேச்சு அடிப்பட்ட போது அவர் இதை மறுக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர் தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சி பெயரை பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முதலில் நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் நடைபெற்றது. அதில் விஜய் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி சினிமா படப்பிடிப்பில் இருந்ததால் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் பேசினார். அதில், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் கிராமங்களில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து பில்லா ஜெகன் தவெக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதை அடுத்து புதிய மாவட்ட செயலாளராக அவரது சகோதரர் சுமன் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?