சாக்கடையில் கிடந்த ஏர் பிஸ்டல் துப்பாக்கி.. சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளர்கள் ஷாக்!!
Author: Udayachandran RadhaKrishnan27 August 2024, 7:14 pm
சாக்கடையில் ஏர் பிஸ்டல் துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் சௌராஷ்ட்ரா தெரு அருகே, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏர் பிஸ்டல் துப்பாக்கி ஒன்று கிடந்துள்ளது.

உடனடியாக இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஏர் பிஸ்டல் துப்பாக்கியை கைப்பற்றி, துப்பாக்கி யாருடையது எதற்காக சாக்கடையில் வீசினார்கள்? இந்த துப்பாக்கி முறையாக லைசன்ஸ் வாங்காமல் துப்பாக்கி பயன்படுத்தி வந்தார்களா அல்லது ஏதேனும் குற்றச்சம்பவத்திற்காக பயன்படுத்திய துப்பாக்கியா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…
சாக்கடையில் துப்பாக்கி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…