நெருங்கும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை.. கோவில் நிர்வாகியுடம் கவசத்தை ஒப்படைத்த திண்டுக்கல் சீனிவாசன்!!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது குரு பூஜையை முன்னிட்டும், 61 வது பிறந்தநாளை முன்னிட்டும் வருகின்ற 30 ஆம் தேதி தேவர் குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது.
இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பங்கேற்று மரியாதை செய்கிறார். இதனை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த 10.10.2023 அன்று அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தேவர் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதனையொட்டி அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வங்கி மேலாளர் முன்னிலையில் கையெழுத்திட்டுதங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தேவர் பூஜைக்கு விழாவிற்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கோவில் டிரஸ்டி காந்திமீனாளிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர் விஜயபாஸ்கர், டாக்டர் மணிகண்டன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி ராஜன் செல்லப்பா, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி வி ஆர்.ராஜ்சத்யன், இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் மற்றும் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.