இந்தாம்மா…ஏய்.. : மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அஞ்சலி செலுத்திய ஓவியர்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2023, 2:31 pm

இந்தாம்மா…ஏய்.. ஓய்ந்தது குரல் : நடிகர் மாரிமுத்துவின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அஞ்சலி செலுத்திய ஓவியர்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் செல்வம் அவர்கள் நடிகர் மாரிமுத்து மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகர் மாரிமுத்து பேசிய “அட ஏம்மா ஏய்” என்ற வசனத்தாலேயே நடிகர் மாரிமுத்து படத்தை வரைந்தார்.

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார், தேனி மாவட்டம் வருஷநாடு பகுதி பசுமலையை பூர்விகமாகக் கொண்டவர் நடிகர் மாரிமுத்து, திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த நடிகர் மாரிமுத்து கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார்.

பின்னர் திரைப்படங்களிலும் இயக்குநராக பணிபுரிந்தார், ராஜ்கிரண், மணிரத்தினம், வஸந்த், சீமான், எஸ் ஜே சூர்யா ஆகியோர்களிடம் உதவி இயக்குனர்கள் பணி புரிந்தார். 2011-ல் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார், வாலி, உதயா உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார்.

தற்போது வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார். எதிர்நீச்சல் டிவி சீரியல் மூலம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டார் நடிகர் மாரிமுத்து. சிறந்த மனிதர் ஆவார் அவருடைய மறைவு திரை உலகத்தினரையும், ரசிகர்களுக்கும் வெறும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

நடிகர் மாரிமுத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் நடித்து பேசிய பட்டி தொட்டி எங்கும் கேட்கும் வசனமான “இந்தாம்மா ஏய்” என்ற வசனத்தை தெர்மாகோல் சீட்டில் எழுதி அந்த சிட்டால் நீர் வண்ணத்தில் தொட்டு ‘இந்தாம்மா ஏய்’ என்ற வசனத்தாலேயே நடிகர் மாரிமுத்து படத்தை எட்டு நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்தார். இந்த ஓவியத்தை பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தார்கள்.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…