ஆடைகளை அவிழ்த்து வடமாநில பெண்களிடம் அந்தரங்க பகுதியை காட்டிய ஆசாமிகள் : தோட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2023, 5:48 pm

அரைகுறை ஆடையுடன் நின்று பெண்களை விபச்சாரத்துக்கு அழைத்த இரு இரு போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தருண் பாலாஜி. இவருக்கு இந்த கிராமத்தில் 8 ஏக்கர் தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று இன்று காலை 8 மணி அளவில் அந்த வழியே வந்த இரு இளைஞர்கள் இந்த பெண்களைப் பார்த்து 500 ரூபாய் தருவதாக கூறி தன் இடுப்புக்கு கீழ் உள்ள ஆடையை அவிழ்த்து உள்ளனர்.

இதனால் பதறிப்போன வட மாநில பெண்கள் தோட்ட உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறையும், தோட்ட உரிமையாளரும் வந்தனர்.

அந்த இளைஞர்கள் இருவரையும் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் முத்துக்குமார் வயது (31) ரேஷன் கடை வீதி சிலம்பனூர் சந்திர பிரகாஷ் (வயது 25) ஏகனூர் தோட்டம் நரசிபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் ஜே சி பி இயந்திரம் மற்றும் வேலை செய்து வருகின்றனர். நேற்று வாளையார் பகுதியில் கல் வாங்கி குடித்து மது போதையில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் தருண்குமார் (தோட்ட உரிமையாளர்) கொடுத்த புகாரின் பேரில் பேரூர் சரக டி எஸ் பி ராஜபாண்டி உத்தரவின் படி தொண்டாமுத்தூர் காவல் ஆய்வாளர் அப்பாதுரை மேற்பார்வையில் எஸ்ஐ அருள் பிரகாஷ் இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

  • Vijay Rangaraju death news படப்பிடிப்பில் திடீர் விபத்து…பிரபல குணச்சித்திர நடிகர் மருத்துவமனையில் மரணம்…!