உயர் ரக R15 பைக்கை ஆட்டைய போட்ட ஆசாமிகள்.. நண்பனின் பைக்கை ஓசி வாங்கி வந்தவருக்கு அதிர்ச்சி.. சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 11:46 am

உயர் ரக R15 பைக்கை ஆட்டைய போட்ட ஆசாமிகள்.. நண்பனின் பைக்கை ஓசி வாங்கி வந்தவருக்கு அதிர்ச்சி.. சிசிடிவி காட்சி!

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் இவர் ஐ.டியில் பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் இவரது நண்பருக்கு இவரது ஆர்”ஒன்”5 (YAMAHA – R15) – வாகனத்தை கொடுத்த உள்ளார்.

அவரது நண்பர் கணபதி பகுதியில் உள்ள கேசவன் வீட்டிற்கு முன்பாக இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.நேற்று முன் தினம் காலை சரியாக மூன்று மணி அளவில் 3″நபர்கள் அந்த பகுதிக்கு வந்து அந்த ஆர்.ஒன்.5″ (“YAMAHA R15”)இருசக்கர வாகனத்தை ஹேண்ட்பாரை உடைத்து திருடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கேசவன் சரவணம்பட்டி காவல்துறையினரிடம் புகார் மனு கொடுத்து உள்ளார்.சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ