பழனி மலையில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த கோவில் உதவி ஆணையர் : சிறைபிடித்த வியாபாரிகளால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2022, 2:12 pm

பழனி கோயில் உதவி ஆணையரை சிறை பிடித்து சாலையோர வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் ஏராளமானோர் கடை நடத்தி வருகின்றனர். தற்போது சபரிமலைக்கு சென்று விட்டு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள சாலை ஓர கடைகளை கோயில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையில், கோயில் பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் போது பாதுகாவலர்கள் கடைக்காரர்களை தாக்கி, பொருட்களை பறித்து சென்றுள்ளானர். இதனால் ஆவேசம் அடைந்த கடைக்காரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கோயில் இணைஆணையர் லட்சுமியின் வாகனத்தை மறித்து முற்றுகையிட்டு வாக்குவதம் செய்தனர்.

இந்த சம்பவத்தால் அடிவாரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பம் அறிந்து வந்த போலீஸார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ