மகள்களை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவை எடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. அலறிய மனைவி : வேலூர் அருகே அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2024, 7:21 pm

ராணிப்பேட்டைமாவட்டம்,சோளிங்கர் அருகேயுள்ள வேலம் பகுதியை சேர்ந்த தம்பதியர்களான ராஜி(45) இந்திரா(41) இவர்களுக்கு அகல்யா(22) சரண்யா(17) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜி ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வரும் நிலையில் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக பல்வேறு இடங்களில் கடன் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் ராஜி நேற்று இரவு தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் இணைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவை எடுத்துள்ளார்

அப்போது முதலாவதாக வீட்டில் உள்ள அறையில் தனது இரண்டு மகள்களையும் தூக்கில் தொங்க விட்டுவிட்டு வெளியே உள்ள அறையில் ராஜி மற்றும் இந்திரா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர்

மேலும் படிக்க: வகுப்பறையில் கள்ளிப்பால் குடித்த பள்ளி மாணவர்கள்… பதறிய ஆசிரியர் : அரியலூரில் அதிர்ச்சி!!

அப்போது தனது மகள்கள் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்த இந்திரா கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தை சேர்ந்த உறவினர்கள் வந்து பார்த்தபோது அதிர்ச்சடைந்ததோடு உடனடியாக தூக்கில் தொங்கப்பட்டு இருந்த இரண்டு பெண் களையும் மீட்டுள்ளனர்

அப்போது அவர்கள் இருவரும் சுயநினைவை இழந்து மயக்கமாக இருந்ததை கண்ட ராஜி தனது மகள்களின் சாவுக்கு நான்தான் காரணம் என எண்ணி வாலாஜா தண்டலம் பகுதிகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்

மேலும் அகல்யா மற்றும் சரண்யா ஆகிய இருவரும் வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் சம்பவங்கள் குறித்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 1059

    0

    0