குக்வித் கோமாளி நிகழ்ச்சியால் பிறந்த குழந்தை.? என்ன என்ன சொல்றாங்க பாருங்க.!

Author: Rajesh
29 May 2022, 12:27 pm

திருமணமான பல தம்பதிகள் குழந்தை இல்லாமல் ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலாக சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். அப்படி செலவு செய்தும் குழந்தை பிறக்காமல் பலர் மனவேதனையில் உள்ளனர்.

இப்படி உள்ள நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்தால் குழந்தை பிறக்கும் என செஃப் வெங்டேஷ் பட் கூறியுள்ளது குபீர் சிரிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டு சீசன்கள் முடிந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அம்மு அபிராமி, வித்யுலேகா, ரோஷ்னி என பலர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இந்நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்.

அதன்படி அந்த வீடியோவில் பேசிய வெங்கட் பட் கூறியிருப்பதாவது, “எட்டு வருசமா எனக்கு குழந்தை இல்லை. அப்ப செக் அப்காக போயிருந்தேன். ஒரு லேடி குழந்தையோட வந்து என்கிட்ட சொன்னாங்க. நான் கடைசி வருஷம் இதே ட்ரீட்மெண்ட்க்காக வந்து இருந்தேன். எங்களுக்கு அப்ப குழந்தை இல்ல.

குக் வித் கோமாளி பார்த்தேன். என்னுடைய கவலை எல்லாம் மறந்து எனக்கு குழந்தை பிறந்துச்சு. நீ கண்டிப்பா அத பாரு உனக்கு குழந்தை பிறக்கும்னு. நீங்க சொன்னா நம்ப மாடீங்க அந்த பொண்ணுக்கு இப்ப குழந்தை இருக்கு” என கூறியுள்ளார்.

இந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் வச்சு செய்து வருகிறார்கள். பலவிதமான மீம்களை கிரியேட் செய்து இணையத்தை தெறிக்க விட்டு வருகிறார்கள். மேலும் முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்கும் என்பதுபோய் தற்போது குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறக்கும் என்று மாறிவிட்டதாகவும் கூறி வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 640

    0

    0