நடு ஆற்றில் தவித்த குட்டி யானை : கடவுள் போல வந்த வனத்துறை… நெகிழ்ந்த தாய் யானை.. (வீடியோ)!!

Author: Udayachandran RadhaKrishnan
30 மார்ச் 2023, 10:58 காலை
Baby Elephant - Updatenews360
Quick Share

மேட்டூர் அருகே தமிழக கர்நாடக எல்லையை ஒட்டி உள்ளது பாலாறு வனப்பகுதி. இங்கு யானை, கரடி, மான், முயல் உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் பாலாறு வனப்பகுதியில் இருந்து காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி காவிரி ஆற்றுக்கு படையெடுக்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து நேற்று தண்ணீர் தேடி யானைகள் கூட்டமாக காவிரி ஆற்றுக்கு வந்தது.

யானைக் கூட்டங்கள் தண்ணீர் அருந்திவிட்டு காவிரியை கடந்து மறு கரையில் உள்ள வனப்பகுதிக்கு சென்று விட குட்டி யானை ஒன்று தண்ணீரில் நீந்த முடியாமல் கரையிலேயே நின்று விட்டது.

இதனை கண்ட கர்நாடக வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.குட்டி யானையை வாகனம் மூலம் பாலாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தாய் யானை கூட்டத்துடன் நின்று கொண்டிருந்தது. இதனை அடுத்து வாகனத்தில் இருந்த குட்டி யானையை வனத்துறையினர் இறக்கிவிட்டனர்.

https://vimeo.com/813072212

பின்னர் வனத்துறையினர் அப்பகுதியில் இருந்து உடனடியாக சென்ற நிலையில் தாய் யானை குட்டி யானை மெதுவாக அழைத்துச் சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்தது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 523

    0

    0