விழுப்புரம் : தனது வீட்டின் அருகே கீழே கிடந்த செல்போன், 2 ஆயிரம் பணத்தை அரசு பள்ளிமானவன் எடுத்து வந்து விழுப்புரம் எஸ் பி ஸ்ரீநாதாவிடம் ஒப்படைத்த மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
விழுப்புரம் நகரபகுதியான அமைச்சாரம்மன் கோவில் வீதியை சார்ந்த 12 வயது சிறுவன் ஜீவா விழுப்புரம் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த சிறுவன் தனது வீட்டின் வாயிலில் முன்பு கேட்பாரற்று கிடந்த பையினை எடுத்து பார்த்துள்ளார். அப்போது பையில் 15 ஆயிரம் மதிப்பிலான செல்போன், 2 ஆயிரம் ரொக்க பணம், 3 ஏ.டி.எம் கார்டினை இருந்ததை கண்டு எடுத்து வந்து அதனை தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த பணத்தையும், செல்போனையும் தொலைத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்லெண்னத்தில் பள்ளி சிறுவன் கேட்பாரற்று கிடந்த செல்போன், 2 ஆயிரம் பணத்தை விழுப்புரம் எஸ் பி ஸ்ரீநாதாவிடம் இன்று ஒப்படைத்தார்.
நேர்மையாக செயல்பட்ட மாணவனை பாராட்டி சாக்லேட், பரிசினை வழங்கினார். மேலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மையாக செயல்பட்ட அரசு பள்ளி மாணவனை போல் அனைத்து மாணவர்களும் செயல்பட வேண்டும் எஸ் பி ஸ்ரீநாதா வலியுறுத்தியுள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.