2 பேரின் உயிரை காவு வாங்கிய ஆலமரம்.. 100 ஆண்டு பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து கோர விபத்து!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2024, 4:27 pm

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 45வது வார்டிற்குட்பட்ட குஸ்னி பாளையம் பகுதியில் சாலையோரமாக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

கோவில் அருகே 100 ஆண்டுகளை கடந்த ஆலமரம், சாய்ந்து சாலையில் சென்ற செப்டிக் டேங்க் லாரியின் கேபின் மீது விழுந்ததில், லாரியின் முன்பக்கம் நசுங்கியது..

பலத்த சத்தத்துடன் மரம் விழுந்ததில், லாரியின் உள் இருந்த பாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் மாரப்பா(45), வெங்கடேஷ்(34) ஆகியோர் வாகனத்திற்குள் சிக்கி உடல்நசுங்கி உயிரிழந்தார்..

பெரிய அளவில் இருந்த ஆலமரத்தை மீட்க முடியாத நிலையில் மத்திகிரி போலிசார், ஒசூர் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மரத்தை வெட்டி அகற்றி லாரியில் உயிரிழந்தவர்களை மீட்க போராடி வருகின்றனர்..

மரம் விழுந்ததில் மின்வயர்களும் துண்டிக்கப்பட்டதால், மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது..

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!