கெஞ்சிக் கேட்ட மனைவி.. ஒத்துக் கொள்ளாத கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல் : கிலியில் கிருஷ்ணகிரி!
Author: Udayachandran RadhaKrishnan1 July 2024, 10:51 am
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள கூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ராம்குமார், இவருக்கும் சூளகிரி அடுத்த ஜோகிரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகள் சுஜாதா என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சுஜாதாவிற்கும் ராம்குமாருக்கும் இடையே குடும்பம் நடத்துவதில் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.
இது குறித்து இரு வீட்டார் பேசி சுஜாதாவிடம் கேட்ட பொழுது சுஜாதா ஓசூர் அடுத்த பேரிகை பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்ற நபருடன் காதல் ஏற்பட்டு பழகி வந்தது சுஜாதாவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சுஜாதாவின் பெற்றோர் ராம்குமாருக்கு பேசி திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது. பின்னர் இதனை ஏற்றுக் கொண்ட ராம்குமார் மனைவி சுஜாதாவுடன் சுமூகமான முறையில் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கணவனுடன் கோபித்துக் கொண்ட சுஜாதா கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி அவரது காதலனுடன் சென்ற நிலையில் மனைவி காணவில்லை என ராம்குமார் கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜாதாவை கண்டுபிடித்து ராம்குமார் வசம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சுஜாதா கணவன் ராம்குமாருக்கு உணவு பரிமாறிவிட்டு வீட்டில் தூங்கச் சென்றுள்ளார் வீட்டின் வெளியே ராம்குமாரின் தந்தை முருகேசன் உறங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டினுள்ளே ஏதோ சத்தம் கேட்டுள்ளது கணவன் மனைவிக்குள் ஏதோ வாய் தகறாரு என்று எண்ணிய முருகேசன் மீண்டும் படுத்து தூங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்த சுஜாதா கணவரின் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுகிறது என்ன ஆச்சு என்று தெரியவில்லை என்று அழுதவாறு வெளியே வந்துள்ளார் ஓடி வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் ராம்குமார் ரத்த வெள்ளத்தில் கழுத்தில் கயிறு இழுக்கப்பட்டு தலை மற்றும் கழுத்து பகுதியில்